கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் திடீர் திருப்பம்..! ஏமாற்றிய காதலனை மாட்டிவிட நாடகம் ஆடிய காதலி

Published : Feb 05, 2023, 02:15 PM ISTUpdated : Feb 05, 2023, 02:40 PM IST
கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் திடீர் திருப்பம்..! ஏமாற்றிய காதலனை மாட்டிவிட நாடகம் ஆடிய காதலி

சுருக்கம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், தனது காதலனை போலீசில் மாட்டிவிட காதலியே நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. 

இளம்பெண் கற்பழிப்பு புகார்

செங்கல்பட்டில் உள்ள தனது தோழியை பார்த்துவிட்டு சைதாப்பேட்டை செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை  4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த பகுதிக்கு வந்த கார் ஒன்றில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தியதாகவும், அந்த கும்பல் செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வைத்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது இளம்பெண் தெரிவித்திருந்தார். இந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீசார் களத்தில் இறங்கினர்.

ரயிலுக்காக காத்திருத்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல்.? குற்றவாளிக்கு கடும் தண்டனை- ராமதாஸ் ஆவேசம்

நாடகம் ஆடிய இளம்பெண்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக அரசியல்கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். மேலும குற்றவாளிகளை உடனே கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரபரப்பு தகவல் வெளியானது.

தன்னை காதலித்து கல்யாணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனை சிக்க வைப்பதற்காகவே தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாக புகார் அளித்தது தெரியவந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது பொய் புகார் என தெரியவந்ததையடுத்தே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையும் படியுங்கள்

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. பிரபல ரவுடிக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!