சென்னையில் பயங்கரம்.. மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

Published : Sep 06, 2022, 07:11 AM ISTUpdated : Sep 06, 2022, 07:20 AM IST
சென்னையில் பயங்கரம்..  மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

சுருக்கம்

சென்னையில் மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(35). இவர் பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து, ஆறு மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று இரவு திருவான்மியூர், காவலர் குடியிருப்பு பகுதியில் மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சரவணனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.. கர்ப்பமாக்கிய பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஓலை சரவணன் மனைவி கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பினர். உடனே இதுதொடர்பாக மனைவி திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓலை சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  பொதுவெளியில் 60 வயது கிழவன் சுய இன்பம்.. நேரில் பார்த்த சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது என்ன தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?