கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி.. மருமகளை வெட்டி கொன்று தலையுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த மாமியார்

Published : Aug 12, 2022, 12:28 PM ISTUpdated : Aug 12, 2022, 02:04 PM IST
கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி.. மருமகளை வெட்டி கொன்று தலையுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த மாமியார்

சுருக்கம்

கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி செய்த மருமகளை கொலை செய்து தலையுடன் மாமியார் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி செய்த மருமகளை கொலை செய்து தலையுடன் மாமியார் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி அடுத்த கே.ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா (35).  இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. இவரது கணவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது பெயரில் இருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை வசுந்தரா தனது பெயருக்கு மாற்றினார். இந்நிலையில், கணவர் இறந்த பிறகு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் சொத்துக்களை கள்ளக் காதலன் பெயரில் மாற்ற வசுந்தரா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

இதனால், மனமுடைந்த மாமியார் சுப்பம்மா, தனது வீட்டிற்கு நேற்று மதியம் சாப்பிட வசுந்தராவை அழைத்தார். அப்போது, சுப்பம்மா அவரது இளைய மகன் சந்து உதவியுடன் கத்தியால் வசுந்தரா தலையை துண்டாக வெட்டி எடுத்தார். 

பின்னர்,  சுமார் 6 கிமீ தூரம் காவல் நிலையத்திற்கு சுப்பம்மா நடந்து வந்து சரணடைந்தார். சுப்பம்மா, சந்துவை போலீசார் கைது செய்தனர். கறுப்பு பிளாஸ்டிக் உறையில் தலை வைத்து சுப்பம்மா கொண்டு சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க;-  பள்ளி வகுப்பறைக்குள் எல்லை மீறிய மாணவர்கள்! கட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்து நெருக்கம்! வீடியோ வைரல்.!

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி