
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் அருகே கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அங்குள்ள ஒரு பப்பிற்கு வந்துள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தம் 180 பள்ளி மாணவ, மாணவிகள் அதில் கலந்துகொண்டுள்ளனர். மாலை 6 மணி வரை பார்ட்டி நடந்துள்ளது. நிகழ்ச்சி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் அந்த சிறுமி பப்பை விட்டு வெளியேறியுள்ளார். சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.
இதனையடுத்து, சிறுமி நடந்த சம்பவத்தை கூறி தந்தையிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேர் சிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம், நேற்று நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறப்பட்டது. இதனிடையே, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இன்னோவா காரில் இருந்து பெண்ணின் காதணி மற்றும் சிறு சிறு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அரசியல் பிரமுக வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
பள்ளி நிர்வாகமே இப்படி செய்யலாமா? சிறுமி கூட்டு பலாத்காரத்தில் திடுக்கிடும் தகவல் அம்பலம்..!