கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணல மார்க்ல கைவச்சிடுவேன்.. பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த HM..!

By vinoth kumar  |  First Published Jun 7, 2022, 12:41 PM IST

மதிப்பெண் குறைத்து விடுவததாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதிப்பெண் குறைத்து விடுவததாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன்  பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கண்ட இடத்தில் கை வைத்து பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  மாணவிகளை பாலியல் தொந்தரவு  செய்தது தொடர்பாக வெளியில் சொன்னால் இன்டர்னல் மார்க் குறைத்து போடுவேன் என்று மாணவிகளை மிரட்டி வந்துள்ளார். இதனால், மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தனர். 

Tap to resize

Latest Videos

ஆனால், தைரியமாக ஒரு மாணவி மட்டும் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பல்வேறு மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், தலைமையாசிரியர் விஜயகுமாரை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!