சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் கைது… இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த விபரீதம்!!

Published : Aug 07, 2022, 04:55 PM IST
சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் கைது… இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த விபரீதம்!!

சுருக்கம்

குன்றத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குன்றத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் அருகே மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் மாங்காடு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் காணாமல் போன 16 வயது  சிறுமியை தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து இருவரையும் பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை அழைத்து சென்ற ஸ்ரீதரன் திருமணம் செய்து கொண்டதால் இந்த வழக்கை போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீஸ் விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு.. மூட நம்பிக்கையால் குழந்தையை அடித்தே கொன்ற தம்பதி..வெளியான வீடியோ !

ஸ்ரீதர் துபாயில் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டதால் துபாயில் இருந்து தமிழகத்திற்கு வந்த அவர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.இதையடுத்து ஸ்ரீதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். துபாயில் வேலை செய்தவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் சென்னைக்கு வந்து சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு