கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Aug 7, 2022, 3:23 PM IST

தொழிலதிபர் ஒருவர் காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார் நவீன் குமார். இவரின் மகள் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நவீன் எதிர்ப்பு தெரிவித்து, எச்சரித்தும் தனது மகள் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலை முறித்துக் கொள்ளாததால் மகள் மீது ஆத்திரமடைந்த நவீன் தனது மகள் காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அங்கு வீட்டில் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு மரத்தில் இருந்த குரங்கை பார்த்து பயந்து தனது மகள் மாடியில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காலில் காயம் ஏற்பட்டதாகவும் நவீன் தெரிவித்துள்ளார். அந்த மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு தனது மகளை நவீன் சிகிச்சைக்காக மாற்றியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அந்த பெண்ணின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து இளம்ப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்துகள், அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது இளம்ப்பெண்ணுக்கு அதிக அளவில் செலுத்தப்பட்டால் விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை யாரே செலுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்க்களை ஆய்வு செய்தபோது, டாக்டர் உடையில் ஒரு நபர் நுழைவதை கண்டுபிடித்தனர். 

விசாரணையில், மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த நரேஷ் குமார் டாக்டர் உடையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றது தெரியவந்தது. விசாரணையில், பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து அப்பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும்படி தன்னிடம் கூறியதாலேயே அவ்வாறு செய்ததாக நரேஷ் ஒப்புக்கொண்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண்ணின் தந்தையான நவீனை கைது செய்தனர். 

மேலும் வார்டு பாய் நரேஷ் குமார், மருத்துவமனை ஊழியாரான பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். விஷ ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

click me!