நைட்டானவே சரக்கு போட்டு டார்ச்சர்.. கடுப்பான காதல் கணவனை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற மனைவி..!

By vinoth kumar  |  First Published Sep 1, 2022, 2:37 PM IST

மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை  மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடலை சேர்ந்தவர் ராமசாமி. இவரது  மகள் ரம்யா (28). இவர் கோயம்புத்தூரில் ஒரு  கம்பெனியில் பணியாற்றிய போது, அங்கு பணிபுரிந்த திருநெல்வேலியை  குமார்  (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Latest Videos

இந்நிலையில், குமார்  தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு  செய்து வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். குமார்  வாங்கிய கடனை ரம்யா  மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து அடைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று  முன்தினம் இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால்  வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த குமார் அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!