அடீஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.36 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருளை பறிமுதல் செய்ததோடு எத்தியோப்பியாவை சேர்ந்த பயணி ஒருவரையும் சுங்கத்துறை கைது செய்துள்ளது.
அடீஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.36 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருளை பறிமுதல் செய்ததோடு எத்தியோப்பியாவை சேர்ந்த பயணி ஒருவரையும் சுங்கத்துறை கைது செய்துள்ளது. எத்தியோப்பியா நாட்டின் தலைநகா் அடிஸ் அபாபா நகரில் இருந்து சென்னை வரும் எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அந்த விமான பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் சோதனை நடத்துவது வழக்கம்.
இதையும் படிங்க: கருமம்.. கருமம்.. ஆசனவாயில் 40 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. உள்ளாடையை கழட்டி பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
அந்த வகையில் அடீஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் அந்த விமானத்தில் வந்த எத்தியோப்பியா நாட்டை சோ்ந்த கொய்டாம் அரேகே வோல்டேமைக்கேல் என்ற 38 வயதான ஆண் பயணியிடம் இருந்து 4.729 கிலோ மெத்தோகுயிலோன் என்ற போதைப்பொருளை கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 2.36 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
undefined
இதையும் படிங்க: அழகான பெண்ணுடன் உல்லாசம்? - ரூ. 7.54 லட்சம் சுருட்டிய மர்ம நபர்! கோவை போலீசார் தேடுதல் வேட்டை!
இதை அடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், எத்தியோப்பியா நாட்டு பயணியை கைது செய்தனா். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் சா்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. மேலும் இவா் சென்னையில் யாரிடம் இந்த போதைப்பொருளை கொடுக்க வந்தாா் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.