கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்துள்ளார்.
கோவை அருகே தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பொய் புகார் அளித்து நாடகமாடிய பாஜகவை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்துள்ளார். தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்காமல் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்காக ஸ்கெட்ச் போட்டு புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி.. கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
இந்நிலையில், பாஜக நிர்வாகிகளான சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தன்னைத் தாக்கி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தனக்குத்தானே தீ வைத்துகொண்டு நாடகமாடியது அம்பலமானது.
இதையும் படிங்க;- டீச்சரை மடக்கிய ஆட்டோ டிரைவர்.. திருமணமானதை மறைத்து ஆசைத்தீர உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய கொடூரம்
இதனையடுத்து, பொய்ப் புகார் அளித்த விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.