120 சவரன் நகைக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்... இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

By vinoth kumar  |  First Published Sep 23, 2021, 7:01 PM IST

திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவிடம்  வரதட்சணை கேட்டு மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, தாய் ஆகியோர் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாளவிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


கணவன் உயிரிழந்த நிலையில் கணவனின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சிசியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் செக்காணூரணி அடுத்த K.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தலையாரி பாண்டி என்பவரது மூத்த மகன் பிரபாகரனுக்கும், காளவாசல் பகுதியை சேர்ந்த மாளவிகா என்ற கல்லூரி மாணவிக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக மணப்பெண்ணிற்கு வரதட்சணையாக 120 சவரன் தங்க நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்கமாவும், சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனால் திருமணமான 10 மாதங்களில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து, மாளவிகா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சீதனமாக கொடுத்த நகை மற்றும் பணத்தையும் சண்டை போட்டு பெண் வீட்டார் திரும்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற வந்த மாளவிகாவிடம் மூளைச்சலவை வைத்து இறந்த பிரபாகரனின் தம்பி பிரகாஷை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவிடம்  வரதட்சணை கேட்டு மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, தாய் ஆகியோர் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாளவிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாப்பிள்ளை பிரகாஷ், அவரது தந்தை பாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!