பெண்கள் குளியலறையில் கேமிரா.. 5 மணி நேரம்.. ஏகப்பட்ட நிர்வாண காட்சிகள்.?? 17 வயது சிறுவன் கைது.

Published : Sep 23, 2021, 05:36 PM ISTUpdated : Sep 23, 2021, 05:43 PM IST
பெண்கள் குளியலறையில் கேமிரா.. 5 மணி நேரம்.. ஏகப்பட்ட நிர்வாண காட்சிகள்.?? 17 வயது சிறுவன் கைது.

சுருக்கம்

விசாரணை நடத்தியதில், கேமரா போன் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர். அதில் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது வாலிபனை போலீசார் கைது செய்தனர். 

பிரபல ஹோட்டல்  குளியலறையில் கேமரா வைத்து பெண்கள் குளிப்பது பதிவு செய்யப்பட்டு வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே நேரத்தில் பெண்களின் அந்தரங்கம் மற்றும் நிர்வாணத்தை பதிவு செய்யும் கொடூரங்களும் மறுபக்கம் அதிகரித்து வருகிறது. பெண்கள் செல்லும் இடங்களான கழிவறை, தங்கும் விடுதி, துணி மாற்றும் இடங்கள் என்று பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் வைத்து அவர்களின் அந்தரங்கம் மட்டும் நிர்வாணத்தை பதிவு செய்யும் வக்கிரங்கள் ஆங்காங்கே தலைதூக்கி வருகிறது.

 

இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதி ஜூப்ளி ஹில்ஸ்ல் உள்ள ட்ரைவ் இன் என்ற பிரபல விடுதியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நட்பர்களுடன் உணவி விடுதிக்கு வந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண், அந்த உணவு விடுதியின் கழிவறைக்கு சென்றுள்ளார், அப்போது ஜன்னல் ஓரத்தில் ரகசியமாக ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த செல்போனில் வீடியோ கேமரா இயங்குவதையும் அவர் கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து உணவு விடுதி மேலாளரிடம் புகார் கூறியதுடன். போலீசிடமும் புகார் தெரிவித்தார். உடனே அங்கு வந்த போலீசார். 

விசாரணை நடத்தியதில், கேமரா போன் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர். அதில் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது வாலிபனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒன் டிரைவ்  இன் ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.  மேலும் அங்கு பணியாற்றும் இன்னும் சில ஊழியர்களிடத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குளியலறையை சுத்தம் செய்ய சென்றபோது அதை வாஷ்ரூமில் வைத்ததாகவும், அதை அங்கேயே மறந்துவிட்டதாகவும் அந்த 17 வயது இளைஞன் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. 

5 மணி நேரம் ஓடியுள்ள கேமிராவில் எத்தனை பெண்களின் வீடியோக்கள் பதிவானது. இது மற்ற யாருக்காவது பகிரப்பட்டதா. அதன் ஹாட் டிஸ்க் வேறு எங்காவது உள்ளதா என்பன உள்ளிடவைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 சி , 509 ,மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசத்தை வெளியிடுதல் அல்லது மின்னணு வடிவத்தில் அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேமரா போனில் 5 மணிநேரம் காட்சிகள் பதிவானதை கண்டறிந்த போலீசார், மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!