ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்..!

By vinoth kumar  |  First Published Dec 24, 2023, 9:22 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. 


பொன்னேரி அருகே  இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனலட்சுமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுமாறு பெற்றோரிடம் தனலட்சுமி கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5 பேர் கைது..!

இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தாய் முத்துலட்சுமி மகளின் உடலை பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். பின்னர் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முரளிகிருஷ்ணன், சிவகாமி, ரவிக்குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;-  பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த டீச்சர்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், பொன்னேரி ஆர்டிஓவான விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே தனலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!