சென்னை கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த ஹெப்சிபா (28) ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சென்னை அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த ஹெப்சிபா (28) ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஹெப்சிபா வீட்டிற்கு மாணவன் சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பள்ளிக்கும், மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து ஆசிரியை ஹெப்சிபாவை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
undefined
இந்நிலையில், வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவன் ஹெப்சிபாவுடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த ஆசிரியையின் செல்போன் எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் கோயம்புத்தூர் காரமடை அருகே வீடு எடுத்து தங்கியிருந்த இருவரையும் மீட்டனர். ஆசிரியையுடன் இருந்த மாணவன் மைனர் என்பதால், இவ்வழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை ஹெப்சிபா கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.