என் அண்ணனே போய் சேர்ந்துட்டா.. நீ யாரு கூட பேசுற.. பெட்ரூமில் வைத்து அண்ணியை கொத்துக் கறி போட்ட மைத்துன்னன்.

Published : Jul 26, 2022, 08:15 PM IST
என் அண்ணனே போய் சேர்ந்துட்டா.. நீ யாரு கூட பேசுற.. பெட்ரூமில் வைத்து அண்ணியை கொத்துக் கறி போட்ட மைத்துன்னன்.

சுருக்கம்

அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்த்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்த்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அண்ணி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத் ஏற்பட்ட நிலையில்  மைத்துனர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார்.இந்த கொடூரம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. சிலர் கணவன் இருக்கும்போதே வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தவறான பாதையில் நடக்கின்றனர், இதில் சில ஆண்களும் மனைவிகளுக்கு துரோகம் செய்து வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருமணத்திற்கு புறம்பான இதுபோன்ற தொடர்புகள் கொலையிலோ அல்லது தற்கொலையிலோ அவர்களை தள்ளி விடுகிறது. குறிப்பாக கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் இருப்பது போல கள்ளக்காதலை தடுக்க பிரத்தியேக சட்டம் தேவை என்ற விமர்சனமும்  எழுகிறது.

கடுமையான சட்டங்கள் இல்லாததே இதுபோன்ற திருமணத்துக்கு புறம்பான உறவுகள் எந்தவித அச்சமுமின்றி நடப்பதற்கு காரணமாக உள்ளது. இது ஒருபுறம் உள்ள நிலையில், அண்ணி கள்ளக்காதலில் ஈடுபடுவதாக சந்தேகித்த மைத்துனன், அண்ணியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்  மீரட் மாவட்டத்தில் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கௌரவ் இவருக்கு 2017இல் ட்விங்கில் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ல் இவர் வாகன விபத்தில் உயிரிழந்தார், இந்நிலையில் கௌரவ்வின் மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதுகுறித்து சந்தேகமடைந்த மைத்துனர் அபிஷேக் தனது அணியை கண்டித்தார், ஆனால் அண்ணி அதைப் பொருட்படுத்தவில்லை, இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடியில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவரது அண்ணி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இதை கண்ட மைத்துனர் அபிஷேக் சுத்தி கத்தி உள்ளிட்ட ஆயுதத்துடன் அண்ணியில் அறைக்குள் நுழைந்தார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த அண்ணியை சரமாரியாக வெட்டினார்.

அதில் ரத்த வெள்ளத்தில் அவர் தண்ணீர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்,  கொலை செய்த அபிஷேக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  ட்விங்கிள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணி செல்போனில் யாருடனோ தொடர்ந்து பேசி வந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் கொலை செய்ததாக மைத்துனர் கூறினார். இந்நிலையில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்து அவர்களது மூன்று குழந்தைகளும்  நிராகதியாகி உள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!