கண்ணில் மிளகாய்ப்பொடி... உடலில் வெந்நீரை ஊற்றி 22 நாட்களாக காதலி பாலியல் பலாத்காரம்... கொடூர சைக்கோ இளைஞன்..!

Published : Jun 11, 2021, 12:40 PM IST
கண்ணில் மிளகாய்ப்பொடி...  உடலில் வெந்நீரை ஊற்றி 22 நாட்களாக காதலி பாலியல் பலாத்காரம்... கொடூர சைக்கோ இளைஞன்..!

சுருக்கம்

அந்த இளம் பெண்ணுக்கு உடல் முழுவதும் சூடு வைத்தும் உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றியும் சித்ரவதை செய்துள்ளார். 

கேரள மாநிலத்தில் 27 வயது இளம்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்து 22 நாட்கள் பாலியல் சித்ரவதை செய்த 32 வயதான சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவனுடன் அவரது3 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன்னுடன் பழகிய இளம்பெண் மீது 22 நாட்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்த மார்ட்டின் ஜோசப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.எர்ணாகுளம் மாவட்டம், காகநாட்டில் இருந்து திருச்சூருக்கு தப்பிச் சென்ற சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப்பை காட்டுக்குள் பொறுத்தப்பட்ட கேமிரா மூலம் கண்காணித்து 3 நாட்கள் தீவிர தேடுதலுக்கு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள பெரமங்கலம் என்ற இடத்தில் வனப்பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவனுடன் தான்ர்ர்ஷ், ஸ்ரீராக், ஜான் ஜோய் ஆகிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று இவர் கொச்சி கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஜோசப் என்ற இந்த இளைஞன் கண்ணூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான இளம் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணை கொச்சி மெரைன் ட்ரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு சென்று அடைத்து வைத்துள்ளார்.

அங்கு பிப்ரவரி 15ம் தேதி  முதல் மார்ச் 8ம் தேதி வரை அந்த பெண்ணை மார்ட்டின் ஜோசப் பாலியல் சித்ரவதை செய்தது தெரியவந்தது. அந்த இளம் பெண்ணுக்கு உடல் முழுவதும் சூடு வைத்தும் உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றியும் சித்ரவதை செய்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு நாளும் கண்ணில் மிளகாய் பொடி தூவியும் நிர்வாண வீடியோக்களை எடுத்தும் பெல்டால் தாக்கியும் வந்துள்ளது உறுதியானது.  சைக்கோ இளைஞன் மார்ட்டின் எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், பிஎம்டபிள்யூ காரில் வலம் வந்து பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!