ஸ்பைக் காலில் அதிகாரிகள் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.4.5 கோடி சுருட்டிய சைபர் கும்பல்

By SG Balan  |  First Published May 21, 2023, 12:10 AM IST

டெல்லியைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் அரசு அதிகாரிகள் போல் பேசி ஏமாற்றிய சைபர் குற்றவாளிகள் 4.5 கோடி ரூபாய் பணத்தை அபகறித்துள்ளனர்.


டெல்லி காவல்துறை பெண் டாக்டரிடம் 4.5 கோடி மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடிவருவதாக சனிக்கிழமை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் பூனம் ராஜ்புத் என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் பெண் டாக்டரிடம் ஸ்கைப் கால் மூலம் பேசியே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர். டெல்லி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த விவரங்களின்படி, மே 5ஆம் தேதி பெண்ணுக்கு முதல் அழைப்பு வந்துள்ளது. அப்போது, ஏப்ரல் 21 ஆம் தேதி மும்பையில் இருந்து தைவானுக்கு அவரது பெயரில் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை பற்றி பேசிய கனடா அதிபருக்கு இலங்கை கண்டனம்

அந்தப் பார்சலில் டாக்டரின் பாஸ்போர்ட், வங்கி ஆவணம், காலணிகள் ஆகியவை தவிர 140 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பான விசாரணை செய்கிற பெயரில், மும்பை அந்தேரி காவல் நிலைய போலீசார் போலவும், ரிசர்வ் வங்கி, சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் போலவும் பல தடவை டாக்டருடன் பேசியுள்ளனர்.

டாக்டரின் பெயர் உள்ளிட்ட KYC விவரங்களை பயன்படுத்தி 23 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அந்தக் கணக்குகளில் உள்ள பணத்தைச் சரிபார்ப்பதற்காக நிரந்தர வைப்புநிதியில் உள்ள தொகை உள்பட அனைத்து வங்கி டெபாசிட் தொகையையும் முன்கூட்டியே முடிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். அது மட்டுமின்றி, டாக்டரின் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த பணத்தையும் ரிசர்வ் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் ஆர்பிஐ அவற்றைச் சரிபார்த்த பின்பு மீண்டும் திரும்பி வங்கிக் கணக்கில் செலுத்தும் எனவும் சொல்லி நம்ப வைத்துள்ளனர்.

கூகுள் மீது நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு! சிசிஐ அபராதத்துக்குப் பின் அடுத்த அடி!

மேலும் நம்பகத் தன்மையைக் காட்டிக்கொள்வதற்காக ரிசர்வ் வங்கியின் பெயரில் கடிதம், மும்பை காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை டாக்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை நம்பி சைபர் வில்லன்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றி இருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர். அதோடு அவரது பணம் பறிபோய்விட்டது.

டாக்டர் பூனம் ராஜ்புத் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 420, 468, 471, 389, 170, மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். டெல்லி போலீசின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் (IFSO) பிரிவு இதைப்பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

பாதி விலையில் சினிமா பிளஸ் ஓடிடி பிளான்! பிஎஸ்என்எஸ் வழங்கும் புதிய் ஆஃபர்!

click me!