கேஸ்-ஐ திறந்து விட்டு, விஷவாயு உருவாக்கி தற்கொலை.. 3 பேர் உயிரிழப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 22, 2022, 12:12 PM IST
கேஸ்-ஐ திறந்து விட்டு, விஷவாயு உருவாக்கி தற்கொலை.. 3 பேர் உயிரிழப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

சுருக்கம்

இதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வீட்டின் கதவு, ஜன்னல்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பாலிதீன் மூலம் மூடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

50 வயது மதிக்கத்தக்க பெண் தனது இரண்டு மகள்களுடன் வீட்டினுள் பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு டெல்லியை அடுத்த பகுதி ஒன்றில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மூவரின் தற்கொலை கேஸ் சேம்பர் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டு உள்ளது என டெல்லி போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அருகாமை வீட்டில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடியிருப்புக்கு வந்தடைந்த போலீசார், வீட்டினுள் நுழைந்து தடயங்களை தேட தொடங்கினார். அப்போது போலீசாருக்கு வீட்டில் எழுதி வைக்கப்பட்டு இருந்த தற்கொலை குறிப்பு கிடைத்தது. இதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வீட்டின் கதவு, ஜன்னல்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பாலிதீன் மூலம் மூடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு:

இதோடு வீட்டின் சமையல் எரிவாயு திறந்து விடப்பட்டு, நிலக்கரியில் இருந்து புகை வெளியேறிக் கொண்டு இருந்தது. இதன் காரணமாக வீடு முழுக்க அதிக விஷத்தன்மை கொண்ட கார்பன் மோனோ ஆக்சைடு பரவி இருக்கிறது. இதனை சுவாசித்ததால் வீட்டில் இருந்து மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். வீட்டின் படுக்கை அறையில் மூவரும் உடல்கள் இருந்துள்ளன. இவர்களின் சடலத்திற்கு பின் நிலக்கரி எரிந்த நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலை குறிப்பில், மூவரும் தற்கொலை செய்து கொண்டதற்கு தீட்டிய திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 

“மிக அதிகளவு விஷத்தன்மை கொண்ட கேஸ்... கார்பன் மோனோ ஆக்சைடு உள்ளே இருக்கிறது. இது தீப்பிடித்து எரியும் தன்மை கொண்டது. தயவு செய்து அறையின் ஜன்னல்களை திறந்து, மின்விசிறியை ஆன் செய்யுங்கள். தீக்குச்சி அல்லது மெழுகுவரத்தி என எதையும் கொளுத்தாதீர்கள் ஜன்னல் ஸ்கிரீனை எடுக்கும் போது கவனமாக இருங்கள். அறை முழுக்க மிகவும் நச்சுத் தன்மை கொண்ட கேஸ் உள்ளது. தயவு செய்து சுவாசிக்காதீர்கள்,” என தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மன வேதனை:

வீட்டினுள் உயிரிழந்தவர்கள் தாய் மஞ்சு, மகள்கள் அன்ஷிகா மற்றும் அன்கு என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மஞ்சுவின் கணவர் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பை தொடர்ந்து குடும்பத்தார் மன வேதனையில் இருந்துள்ளனர். கடந்த சில காலமாக மஞ்சுவுக்கும் உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாகி இருந்தார் என தற்கொலை செய்து கொண்ட மஞ்சு வீட்டின் அருகில் இருப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
ரூ.2000 கொடுத்தா இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்