முகநூல் காதலனுக்காக தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவி ..! திருவள்ளூரில் பரபரப்பு..!

Published : Feb 28, 2020, 12:37 PM IST
முகநூல் காதலனுக்காக தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவி ..! திருவள்ளூரில் பரபரப்பு..!

சுருக்கம்

பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் தாயை காதலனின் நண்பர்களின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முகநூல் காதலனுக்காக தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவி ..! 

பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் தாயை காதலனின் நண்பர்களின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகநாதன். இவரது  மனைவி பானுமதி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி மற்றும் தேவிப்பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர். 


 
தேவிப்பிரியா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில், தன் காதலனிடம் தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார் தேவிப்பிரியா. அதற்கு அவரோ, தான் மைசூரில் இருப்பதாகவும்,தனது நண்பர்களை அனுப்பி வைக்கிறேன். நீ அவர்களுடன் வந்து விடு என கூறி  உள்ளார்.

அதே போல், காதலன் சுரேஷ் தனது இரண்டு நண்பர்களையும் அனுப்பி தேவிபிரியாவை அழைத்து வர சொல்லி உள்ளார். தேவிப்பிரியா முகம் தெரியாத அந்த இருவருடன் தன் வீட்டிற்கு சென்று தனது உடைமைகளை எடுக்க முயன்ற போது தாய் தடுத்து நிறுத்தி உள்ளார். இதில் கோபம் அடைந்த அந்த பெண், வீட்டில் இருந்த கத்தி எடுத்து தன் தாய் என்று கூட பார்க்காமல் வயிறு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பானுமதியை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகி்ச்சை பலனளிக்காமல் பானுமதி உயிரிழந்தார். 

இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் முகநூல் பழக்கம் முதல் நகை பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுவது வரை எல்லா விவரமும் தெரிய வந்துள்ளது.

மேலும் காதலர் சுரேஷை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை