கறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள்!! எப்படி நடந்தது இந்த கொலை.!!

Published : Feb 26, 2020, 11:29 PM IST
கறிவிருந்து கொடுத்த நண்பணை  கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள்!! எப்படி நடந்தது இந்த கொலை.!!

சுருக்கம்

கோயில் திருவிழாவில் கறிவிருந்து கொடுத்த நண்பனை குடிபோதையில் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

T.Balamurukan

கோயில் திருவிழாவில் கறிவிருந்து கொடுத்த நண்பனை குடிபோதையில் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு, ஐயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன். இவர் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி உமா. துரையனின் ஊரில் கோவில் திருவிழா அதை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்திருக்கிறார்.   துரையன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது கிடா விருந்து தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துரையனைத் தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் அவனது நண்பர்கள் போட்டிருக்கிறார்கள்.இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காகப் போராடினார். இதையடுத்து மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் துரையனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைப் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை