தேனியில் பயங்கரம்.. மருமகளுடன் கள்ளக்காதல்? தூங்கிக்கொண்டிருந்த தந்தையை வெட்டி கொன்ற மகன்..!

Published : Mar 07, 2021, 05:34 PM IST
தேனியில் பயங்கரம்..  மருமகளுடன் கள்ளக்காதல்? தூங்கிக்கொண்டிருந்த தந்தையை வெட்டி கொன்ற மகன்..!

சுருக்கம்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக நினைத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக நினைத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (75). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வந்தனர். ஜெயக்குமார் என்ற மகன் மட்டும் மனைவியை விட்டு பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அய்யாத்துரை ரத்த வெள்ளத்தில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அய்யாத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். 

இதனையடுத்து, ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், போலீசாரிடம் அவர் அதிர்ச்சி தகவலை அளித்தார். எனக்கும் காயத்திரி என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது தந்தைக்கும் காயத்திரிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கும்  என சந்தேகப்பட்டு அவர்களிடம் தகராறு செய்து வந்தேன்.

இதனால் எனது மாமனார் வீட்டுக்கு சென்ற காயத்திரி திரும்பி வரவே இல்லை. கடந்த மாதம் எனது தாய் இறந்து விட்டார். அதில் பங்கேற்க காயத்திரி குடும்பத்தினர் வந்தனர். அப்போது எங்களை சேர்த்து வைக்கும்படி தெரிவித்தேன். ஆனால், அதற்கு எனது தந்தை மறுத்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் வரை நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என நினைத்தேன். இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த என் தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்றார். தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!