பக்கத்து வீட்டு பையனுடன் தீராத கள்ளக்காதல்.. உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

Published : Mar 04, 2021, 04:27 PM IST
பக்கத்து வீட்டு பையனுடன் தீராத கள்ளக்காதல்.. உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

சுருக்கம்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியைச் சேர்ந்தவர் லியோபால் (33). வேன் ஓட்டுநர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு, 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். லியோபாலின் தந்தை சகாயராஜ், மூத்த மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிப்ரவரி 8ம் தேதி மாமனார் சகாயராஜை போனில் தொடர்பு கொண்ட சுஜித்ராமேரி 4-ம் தேதி புதுச்சேரியில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு சென்ற லியோபால் வீடு திரும்பவில்லை எனக் கூறினார்.

மகன் காணமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சகாயராஜ் பனையபுரம் வந்தார். அப்போது வீட்டில் சுஜிதாமேரி இல்லை. குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம்தோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது. இதையடுத்து குழந்தைகளிடம் அவர் கேட்டபோது, காலையில் இருந்து சுஜிதாமேரியை காணவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து சகாயராஜ் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகன், மருமகள் ஆகியோரை காணவில்லை என்றும், வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம் தோண்டப்பட்ட தடயம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று காலை விக்கிரவாண்டி போலீசார் லியோபாலின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த சந்தேகத்துக்கிடமான இடத்தை தோண்டினர். அப்போது அங்கு கைகள் கட்டப்பட்டு அழுகியநிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை பார்த்ததும் சகாயராஜ் தனது மகன் லியோபால்தான் என உறுதி செய்தார். லியோ பாலின் கழுத்து அறுக்கப்பட்டும், தலையில் பலத்த காயங்களும் இருந்தன. இதையடுத்து லியோபாலின் உடலை அங்கேயே வைத்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லியோபால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(20). கல்லூரி மாணவரான இவருக்கும், சுஜிதா மேரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. லியோபால் வீட்டில் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணனும், சுஜிதாமேரியும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதை அறிந்த லியோபால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால், சுஜிதாமேரியும், ராதாகிருஷ்ணனும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி லியோபாலின் உடலை புதைத்தனர்.

அதன்பின்னர் சுஜிதாமேரி தனது கணவரை காணவில்லை என்று தனது மாமனாருக்கு போன்செய்து கூறியுள்ளார். இருப்பினும் நாம் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கள்ளக்காதலர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வருகின்றனர். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை