அட கருமம் புடிச்சவனே.. இளம்பெண் என்று நினைத்து 75 வயது கிழவியை வாயை பொத்தி பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர்..!

Published : Mar 05, 2021, 04:28 PM IST
அட கருமம் புடிச்சவனே.. இளம்பெண் என்று நினைத்து 75 வயது கிழவியை வாயை பொத்தி பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர்..!

சுருக்கம்

சென்னையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (75). திருமணம் ஆகாத இவர், தனியாக வசித்து வந்தார். அரசு கொடுக்கும் முதியோர் பென்ஷனை வாங்கி குடித்தனம் நடத்தி வந்தார். அக்கம்பக்கத்தில் ஏதேனும் கூலி வேலைக்கு அழைத்தாலும் சென்று வேலை செய்வார். நேற்று காலை ஆதிலட்சுமி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை. 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், திருவல்லிக்கேணி நொச்சி குப்பத்தை சேர்ந்த வசந்த்குமார் (21), மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து, விசாரணை நடத்தியபோது, கஞ்சா போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில்: நான், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் கஞ்சா போதையில் ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவில் நடந்து சென்றேன். அப்போது, அங்குள்ள ஒரு வீடு  திறந்து இருந்தது. வீட்டில் நுழைந்து பார்த்தபோது, பெண் ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை இளம்பெண் என்று நினைத்து வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தேன். 

அப்போது, அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்து, தலையை பிடித்து தரையில் பலமாக தாக்கினேன். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். இதையடுத்து, கொள்ளையர்கள் நகையை பறித்துக்கொண்டு, மூதாட்டியை கொன் றபோல் மற்றவர்களை நம்ப வைப்பதற்கு, மூதாட்டி அணிந்து இந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினேன்.  கஞ்சா போதையில் இளம்பெண் என்று நினைத்து தவறாக மூதாட்டியை பாலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை