டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்! ஓட்டலுக்கு நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்! வீடியோ எடுத்து மிரட்டல்.!

By vinoth kumar  |  First Published Jul 26, 2023, 2:45 PM IST

டேட்டிங் செயலி வழியே அறிமுகமான நபரை நம்பி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டேட்டிங் செயலி வழியே அறிமுகமான நபரை நம்பி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலம்  குருகிராம் நகரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் டேட்டிங் செயலி வழியே இளைஞர் ஒருவர் அறிமுகமானார்.  அவருடன் சாட்டிங் செய்து வந்த நிலையில், இளம்பெண்ணை ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அந்நபர் அழைத்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

அதன்படி ஜூன் 29ம் தேதி செக்டர் 50-ல் உள்ள ஓட்டலுக்கு அவர் சென்றார். அப்போது, ஓட்டல் அறையில் இருந்த 2 பேர் அவருக்கு உணவு கொடுத்தனர். அதனை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கினார். இதனையடுத்து, இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

அந்த இளம்பெண்ணுக்கு மயக்கம் தெளிந்து எழுந்த போது ஆடைகள் கலைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது இதுதொடர்பாக வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். ஒரு வழியாக எப்படியோ அவர்களிடம் தப்பித்து வீட்டுக்கு வந்த இளம்பெண் போலீசில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!