கோவை குழந்தை கொலை வழக்கில் திருப்புமுனை..! பிடிபட்டான் காமூகன்..!

Published : Jun 25, 2019, 05:24 PM ISTUpdated : Jun 25, 2019, 06:05 PM IST
கோவை குழந்தை கொலை வழக்கில் திருப்புமுனை..! பிடிபட்டான் காமூகன்..!

சுருக்கம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்த கனகராஜ்-காஞ்சனா தம்பதியினருக்கு அரும்பாதா என்ற இரண்டரை வயது பெண்  குழந்தை  உள்ளது. இந்த விவகாரத்தில் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்த கனகராஜ் - காஞ்சனா தம்பதியினருக்கு அரும்பாதா என்ற இரண்டரை வயது பெண்  குழந்தை உள்ளது. இந்த விவகாரத்தில் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் தாய் காஞ்சனா தனது குழந்தையுடன் தாய் பேச்சம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காஞ்சனாவின் சகோதரர் ரகுநாத் மற்றும் மேலும் உறவினர்கள் இருவர் தங்கை உள்ளனர். அன்றைய தினத்தில் இரவு 2 மணியளவில் குழந்தை அழுதுள்ளது. பின்னர் அதற்கு பால் கொடுத்துவிட்டு காஞ்சனா உறங்கி உள்ளார். பின்னர் மூன்றரை மணியளவில் கண்விழித்துப் பார்த்த போது, அருகில் குழந்தை இல்லாததால், பதற்றமடைந்த காஞ்சனா தனது உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.

அப்போது 500 மீட்டர் தொலைவில் உள்ள பழைய கிணறு ஒன்றில் குழந்தை வீசப்பட்டு இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த காஞ்சனா குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே குழந்தை இறந்துள்ளதாக பல் மருத்துவர்கள் தெரிவிக்கவே கதறி அழுதுள்ளார் தாய். 

இதுகுறித்து தற்போது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் காஞ்சனாவின் சகோதரர் ரகுநாத் அந்த வீட்டில் தங்கி இருந்ததாகவும், பாலியல் நோக்கத்தோடு குழந்தையை எடுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது மயங்கியதால், கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

பின்னர் ரகுநாத்தை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குழந்தையின் சடலத்தை பீளமேடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கின்றன உறவினர்கள். பச்சிளம் குழந்தையிடம் கூட காமத்தை எதிர்பார்க்கும் காமுகனுக்கு இந்திய தண்டனை சட்டம் என்ன  செய்ய போகிறது என்பதை யாவரையும் அறிந்ததே..!

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்