தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த மாணவர்கள் !! ரயில் மோதியதில் 4 பேர் பரிதாப பலி !!

Published : Nov 14, 2019, 07:57 AM IST
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த மாணவர்கள் !! ரயில் மோதியதில் 4 பேர் பரிதாப பலி !!

சுருக்கம்

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூர்  அருகே உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் கொடைக்கானலைச்  சித்திக் ராஜா, நிலக்கோட்டையைச் சேர்ந்த  ராஜசேகர் மற்றும்  ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி  ஆகிய 4 பேரும் படித்து வந்தனர். 

நண்பர்களான இவர்கள்  இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில்  உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்  அவர்கள் மீது மோதியது.

இதில்  சம்பவ இடத்திலேயே  மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!