ஆற்றங்கரையில் இளம் பெண்ணிடம் மாணவன் உல்லாசம் !! பெண்ணை மிரட்டி கற்பழித்த மாணவனின் நண்பர்கள் !!

Published : Nov 13, 2019, 06:46 PM ISTUpdated : Nov 13, 2019, 07:11 PM IST
ஆற்றங்கரையில் இளம் பெண்ணிடம் மாணவன் உல்லாசம்  !! பெண்ணை மிரட்டி கற்பழித்த மாணவனின் நண்பர்கள் !!

சுருக்கம்

காட்டுமன்னார்கோவில் அருகே இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவருக்கும், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான விக்னேஷ் , சூர்யபிரகாஷ்  ஆகியோரிடம் தான் விசித்ரா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் மாதவன் தனது காதலி விசித்ராவை அங்குள்ள ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தார்.

மாதவனும் , விசித்ராவும் ஆற்றங்கரையில் இருப்பதை அறிந்த  மாதவனின் நண்பர்கள் விக்னேஷ், சூர்யபிரகாஷ் ஆகியோர் ஆற்றங்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த விசித்ராவை மிரட்டி இருவரும் கற்பழித்தனர். இதற்கு மாதவனும் உடந்தையாக இருந்துள்ளார்.

பின்னர் மாதவன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து விசித்ரா அழுதுகொண்டு வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் இருந்த அண்ணன் மற்றும் தந்தையிடம் நடந்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். தொடர்ந்து விசித்ராவின் அண்ணன் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து விக்னேஷ், மாதவன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும்  இன்று காலை  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதேபோல் சூர்யபிரகாசும் கல்லூரியில் படித்து வருகிறார். இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!