நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.
நாங்குநேரியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.
இதையும் படிங்க;- சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?
இந்நிலையில், வழக்கம் போல இன்று காலை வானுமாமலை கடையை திறந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கடையின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் இரண்டு நாட்டு குண்டுகள் வெடிக்காத நிலையில் ஒரே ஒரு குண்டு மட்டும் அங்கிருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த போர்டில் பட்டு வெடித்துள்ளது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
இதில், அதிஷ்டவசமாக தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும்ட பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.