Crime News: ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவி பலாத்காரம்!கர்ப்பமாக்கிய 12ம் வகுப்பு மாணவன் போச்சோவில் கைது!

By vinoth kumar  |  First Published Nov 19, 2023, 2:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.


11ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் போக்சோ சட்டதத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்ட போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உல்லாசத்தின் ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான கள்ளக்காதலன்.. வாயில் மதுவை ஊற்றி கொடூர கொலை.! சிக்கிய காம தாய்!

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க;-  ஹவுஸ் ஓனர் மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்! உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி!சிக்கியது எப்படி?

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததனர். இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 11ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி 12ம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!