ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

Published : Oct 28, 2022, 02:33 PM IST
 ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சுருக்கம்

சத்யா ஒருபோதும் தான் படிக்கவில்லை என்பதற்காகவோ,ஒழுங்கான வேலைகளுக்கு செல்லவில்லை என்பதற்காகவோ, பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்காகவோ கோபித்துக் கொண்டதே இல்லை என அவரது காதலன் சதீஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

கல்லூரி மாணவி கொலை

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிக்க மறுத்ததால் ரயிலில் தள்ளி கொலை செய்ததாக தகவல் வெளியானது. இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சத்யா கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி  உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார்  தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷை சிபிசிஐடி போலீசார் நேற்று ஒருநாள் போலீஸ் காவில் எடுத்து விசாரணை நடத்தினார். மேலும் கொலை செய்த இடத்திற்க்கு அழைத்து சென்று நடித்து காட்ட செய்தும் பதிவு செய்தனர். 

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு... சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு..!


கொலையாளி வாக்குமூலம்

போலீஸ் விசாரணையின் போது கொலையாளி சதீஷிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது சதீஷ் தனது வீட்டின் அவரது அறை முழுவதுமாக சத்யாவின் பெயரை எழுதி வைத்திருப்பதாகவும், அவரை உயிருக்கு உயிராக காதலித்தாக தெரிவித்துள்ளார்.  மேலும் தான் சத்யாவுடன் பழகுவதை பிடிக்காத அவரது தாயார் தான், சத்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்ததாகவும், இதன் காரணமாக சத்யா தன்னிடம் சரிவர பேசவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சத்யாவை தொடர்ந்து பலமுறை பேச தொடர்பு கொண்ட போதும் அவர் பேசாத ஆத்திரத்தில் அவரை ரயில் முன் தள்ளி விட்டேன் என கூறியுள்ளார்.  ஆனால் அவர் இறந்து விடுவார் என தான் நினைக்கவில்லை எனும் தெரிவித்துள்ளார். ஒரு நாள் போலீஸ் விசாரணை முடிவடைந்ததவுடன் சதீஷை மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படியுங்கள்

திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தற்கொலை.. வீட்டின் உரிமையாளர் தான் காரணமா..? என்ன நடந்தது..? பகீர் தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?