நிலத்தை அபகரித்துவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்...? ஓபிஎஸ் சகோதரர் மீது பரபரப்பு புகார்

By Ajmal KhanFirst Published Jul 21, 2022, 4:37 PM IST
Highlights

நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

நில அபகரிப்பு புகார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது அதிமுகவில் இருந்து ஓ.ராஜாவை நீக்கியும் உள்ளார். இதனையடுத்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டதையடுத்து மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முனியாண்டி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,  தனக்கு சொந்தமான நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு நிலத்திற்குரிய பணத்தை தராமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பதுடன், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவதாக ஓ.ராஜா மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி ஜெயந்திநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி(59).இவரது மனைவி சந்தானலட்சுமி.இவர்களுக்கு சொந்தமாக 83 சென்ட் நிலம் (சர்வே எண் 83/2 1A)கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்ந நிலத்தை கடந்த 2010 ம் ஆண்டு தங்கள் மகளின் திருமண செலவுக்காகவும், குடும்ப செலவுக்காகவும், விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது  இந்த நிலத்தை தான் வாங்கிக் கொள்வதாக கூறிய ஓ.ராஜா  ரூபாய் 40 லட்சத்திற்கு கிரையம் பேசி, அவரது பினாமியான கிருஷ்ணன் என்பவரின் பெயரில் பவர் எழுதித் தரச் சொல்லியுள்ளார். இதனையடுத்து முனியாண்டியின் மனைவி கிருஷ்ணனின் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மதுரையில் ஒரே வாரத்தில் 3 காவலர்கள் அடுத்தடுத்து டிஸ்மிஸ்..! என்ன காரணம் தெரியுமா?

கொலை செய்வதாக மிரட்டல்

இதன்  பின்னர் ஓ.ராஜாவிடம் பணம் கேட்டபோது அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும், இது குறித்து பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பணம் தர முடியாது அதனையும் மீறி பணம் கேட்டால் உங்களை கொலை செய்த புதைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த புகாரில் முனியாண்டி தெரிவித்துள்ளார். மேலும் தங்களிடம் பவர் எழுதி வாங்கிய கிருஷ்ணன் என்பவர் ஓ.ராஜாவின் மற்றொரு பினாமியான விஜயகுமார் என்பவருக்கு எங்களது நிலத்தை பெயரளவிற்கு விற்பனை செய்தது போல் ஒரு பத்திரத்தை தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே  இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை காவல்துறையில் மனு அளித்தும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை ஓ.ராஜா மீது எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

திறக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்..! ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் திருட்டா..? உண்மை நிலவரம் என்ன..?

நிலத்தை மீட்க வேண்டும்

தற்போது ஓ.ராஜா அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்று வருவதாகவும், இதனால் அந்த விற்பனையை தடுத்து அந்த நிலத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஓ.ராஜா, கிருஷ்ணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது சொத்தை திரும்ப மீட்டுத் தர வேண்டும் என்றும் முனியாண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த  சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! சேதமடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியான சி.வி.சண்முகம்

click me!