மழைக்கு ஒதுங்கிய சிறுமி!நைசாக ஒதுக்குப்புறமாக கூட்டிட்டுப்போன 73 வயது கிழவன்!கண்ட இடத்தில் கை வைத்ததால் அலறல்

Published : Jul 21, 2022, 01:51 PM ISTUpdated : Jul 21, 2022, 01:53 PM IST
மழைக்கு ஒதுங்கிய சிறுமி!நைசாக ஒதுக்குப்புறமாக கூட்டிட்டுப்போன 73 வயது கிழவன்!கண்ட இடத்தில் கை வைத்ததால் அலறல்

சுருக்கம்

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 73 வயது கிழவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 73 வயது கிழவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டு வேலைகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி பகத்சிங் நகர் வழியாக தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை வந்தது. இதனையடுத்து சிறுமி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு மழைக்காக ஒதுங்கி நின்றார். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?

அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஜோதிபுரத்தை சேர்ந்த நடராஜன் (73) என்பவர் சிறுமியிடம் அன்பாக பேசுவது போல் நடித்தார். பின்னர் அவர் சிறுமியை மண்டபத்துக்குள் வருமாறு அழைத்தார். சிறுமி உள்ளே சென்றதும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, எப்படியோ அவரிடம் தப்பித்து சென்றுவிட்டார். 

இதையும் படிங்க;- ஹாஸ்பிடலில் புகுந்தும் சிறுவனை விடாமல் ஐசியூவில் வைத்து போட்டு தள்ளிய கும்பல்.. பகீள் சிளப்பும் வீடியோ.!

இது குறித்து அவர் தனது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். இந்தத புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி நடராஜனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை