கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு.. பாயிண்டை பிடித்த குற்றவாளி தரப்பு.. விடுதலைக்கு இதுதான் காரணம்?

By vinoth kumar  |  First Published Sep 23, 2022, 9:49 AM IST

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த திலகவதி கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து கடலூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம் உள்ள தனியார் கல்லூரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த திலகவதி கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மசாஜ் செய்தே பிரபு என்னை மடக்கினார்! கொலை செய்தது ஏன்? 2 கள்ளக்காதலனுடன் கைதான பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

போலீசார் விசாரணையில் திலகவதியை ஆகாஷ் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை அவர் ஏற்க மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை  கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆகாஷ் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திலகவதி உறவினர்களே அவரை கொலை செய்து விட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையில் உள்ளது போல எந்த ஒரு ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ நிரூபிக்கப்படாத காரணத்தினால் ஆகாஷை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். 

இதையும் படிங்க;-  வீடு வீடாக சென்று ரகசிய கேமரா.. ஆன்டிகள், இளம்பெண்கள் குளிப்பதை அங்குலம் அங்குலமாக ரசித்த வாலிபர்கள்..!

click me!