மசாஜ் செய்தே பிரபு என்னை மடக்கினார்! கொலை செய்தது ஏன்? 2 கள்ளக்காதலனுடன் கைதான பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

By vinoth kumar  |  First Published Sep 23, 2022, 8:32 AM IST

கோவையில் அழகு கலை நிபுணரை கட்டிங் மெஷின் மூலம் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


கோவையில் அழகு கலை நிபுணரை கட்டிங் மெஷின் மூலம் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் வி.கே.எல் பகுதியில் கடந்த 15ம் தேதி குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்ட மனிதனின் கை ஒன்று ரத்தம் சொட்ட சொட்ட கவரில்  வைத்து வீசப்பட்டுள்ளதாக துப்புரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குப்பை தொட்டியில் இருந்த  கையை மீட்டு அந்த கை யாருடையது? என தீவிரமாக விசாரித்தனர். 

Tap to resize

Latest Videos

விசாரணையில் அந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு (39) என்பவருடையது என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடைசியாக  செல்போனில் யாருடன் பேசினார் என்பதை ஆய்வு செய்த பிறகு அவரது கள்ளக்காதலி கவிதா, கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைதான பெண் கவிதா அளித்த வாக்குமூலத்தில்;- அழகு கலை நிபுணரான பிரபு எனக்கு மசாஜ் தெரபி அளித்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.  கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். அப்போது எனக்கு தெரியாமல் பிரபு செல்போனில் ஆபாச போட்டோ எடுத்துள்ளார்.

இதனிடையே, எனக்கு அமுல் திவாகர் மற்றும் கார்த்திக்குடனும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் ஏற்பட்டது. இதனால், பிரவை கழற்றிவிட முடிவு செய்து அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். இதையறிந்த பிரபு அவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறி, எனது ஆபாச போட்டோக்களை காட்டி, குடும்பத்தில் இருந்து உன்னை பிரித்து விடுவேன் என மிரட்டினார். நாளுக்கு நாள் அவரது டார்ச்சர் தாங்கா முடியாமல் அமுல் திவாகர், கார்த்திக்கிடம் கூறி புலம்பினேன். இதையடுத்து இடையர்பாளையத்தில் உள்ள அமுல் திவாகர் வீட்டுக்கு பிரபுவை அழைத்து சென்று கொலை செய்ய முடிவு செய்தோம். பிரபுவை அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோர் திட்டமிட்டபடி கொலை செய்து உடலை எலெக்ட்ரிக் கட்டிங் மெஷின் மூலம் 12 துண்டுகளாக வெட்டி வீசிவிட்டு என்னிடம் தகவல் சொன்னார்கள். தலை கிடைக்காமல் இருந்தால் போலீசார் இந்த வழக்கை விட்டுவிடுவார்கள் என நினைத்தோம். ஆனால்,  செல்போன் தொடர்பை வைத்தும், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்தும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். 

click me!