சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது... காரணம் இதுதான்!!

By Narendran SFirst Published Sep 22, 2022, 10:03 PM IST
Highlights

சிறுமிக்கும் 24 வயது தீட்சிதருக்கும் திருமணம் செய்து வைத்த வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமிக்கும் 24 வயது தீட்சிதருக்கும் திருமணம் செய்து வைத்த வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக புகார்கள் வந்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒரு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கை துடியலூரில், தலை திருப்பூரில்... அதிர வைத்த பகீர் கொலையின் பின்னணி என்ன?

இதுக்குறித்து சிலர் ஆதாரத்துடன் சமூக நலத்துறை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், அதிரடியாக தனிப்படை அமைத்து சிதம்பரத்தில் சிறுமிக்கு திருமணம் செய்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சிதம்பரத்தில் வைத்து விசாரணை செய்யாமல் கடலூருக்கு அழைத்து வந்து அவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… 53 வயதில் செய்யும் வேலையா இது?

அப்போது 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் 24 வயது தீட்சிதற்கும் திருமணம் செய்து வைத்தது விசாரணை உறுதியானது. இதனை அடுத்து சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சதர் மாப்பிள்ளையின் தந்தை கணபதி தீட்சிதர் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர். பல ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சர்ச்சையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

click me!