பஸ் கண்டரக்டருடன் கல்லூரி மாணவிக்கு காதல்... கல்யாணம் முடிந்தவுடன் மார்பில் கத்திக்குத்து... நடந்தது என்ன..?

By Thiraviaraj RMFirst Published Sep 27, 2021, 1:11 PM IST
Highlights

அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு, அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த மசையன் தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பாலச்சந்திரன் என்பவர் விசைத்தறி தொழிலாளி. கிருஷ்ணகிரி மாவட்டம், பாரீஸ் நகரைச் சேர்ந்த 26 வயதான இலக்கியா,  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பேருந்தில் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றிய பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். 

இந்தக் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி, கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப் பட்ட அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். பாலமுருகனும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இலக்கியா செல் போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .

அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு, அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார். அவரை, இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்த பாலமுருகனை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர் . 

click me!