நள்ளிரவில் மனைவி செய்த காரியம்.. நேரில் பார்த்து தட்டிக்கேட்ட கணவரை மார்பில் குத்திய மனைவி.. நடந்தது என்ன?

Published : Sep 26, 2021, 06:58 PM IST
நள்ளிரவில் மனைவி செய்த காரியம்.. நேரில் பார்த்து தட்டிக்கேட்ட கணவரை மார்பில் குத்திய மனைவி.. நடந்தது என்ன?

சுருக்கம்

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் (32). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா (26). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பேருந்தில் சென்று வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 

நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை மனைவி சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் (32). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா (26). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பேருந்தில் சென்று வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் தர்மபுரியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்து வழக்கை வாபஸ் பெற்றார். இதனையடுத்து, உறவினர்கள் சமாதனம் செய்து வைத்ததையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலமுருகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி