சாட்டையை கையிலெடுத்த சைலேந்திர பாபு... மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் கைது..

By manimegalai aFirst Published Sep 26, 2021, 10:56 AM IST
Highlights

மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் அதிரடி கைது.. துப்பாக்கி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல்.

மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் கைது.. துப்பாக்கி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்..

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக முன்விரோத கொலைகள் அதிகரித்துள்ளதால் கூலிப்படையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் கடந்த 23ஆம் தேதி இரவு முதல் மாநிலம் முழுவதும் storming operation நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ரவுடிகள் பதுக்கிவைத்துள்ள ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் நடந்த சோதனையில் 21592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,325 பேரில் 294 பேர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றப் பிடியாணையின்படி கைதானவர்கள்.

பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் நன்னடத்தை பினையாணை
பெறப்பட்டு 2,526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் என மொத்தம் 1 117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலை குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் இன்னும் தீவிரம் அடையும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.இது மட்டுமன்றி பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 972 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

click me!