நீங்க மனுசனுங்களே இல்லடா மிருகம்டா.. ஒரு பெண்ணுடன் 33 பேர் மாறி மாறி உல்லாசம்.. 8 மாதங்களாக கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2021, 5:52 PM IST
Highlights

தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் வந்த நிலையில், கொடுமை தாங்க முடியாத அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

ஒரு பெண்ணை கடந்த 8 மாதங்களாக 33 பேர் மாறி மாறி வன்புணர்வு செய்துவந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் இதுவரை 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாத குழந்தை முதல் 60 வயது பெண்மணி வரை பாலியல் சீண்டலுக்கு அளக்கப்படும் அவலம் சமூகத்தில் அரங்கேறி வருகிறது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணத்திற்குப் பின்னர் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி மனைவியை அடித்து கொடுமை செய்வது என பல கோணங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகிறது. 

இந்த வரிசையில் காதலிப்பதாக நாடகமாடி பெண் ஒருவருடன் ஆபாச வீடியோ எடுத்துவைத்து அந்தப் பெண்ணை கடந்த 8 மாதங்களில் அடுத்தடுத்து 30 பேர் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பெண்ணிடம், இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி அந்தப் பெண்ணைச் சுற்றி வந்தார், பின்னர் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே இருவரும் பழகி வந்தனர், பின்னர் காதலிப்பதாகக் கூறிய இளைஞனால் ஜனவரி 29 அன்று அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அதை வீடியோவாக எடுத்து, அந்த பெண்ணை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். அந்த வீடியோவை அவளது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களும் இந்த இளைஞர் பகிர்ந்தான், அதை வைத்து அவர்களும் சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தனர். குறைந்தது நான்கு இடங்களில்  7 முதல் எட்டு பேர்வரை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். டோம்பாவாலி,  பத்தலாப்பூர்,  ரபாலே, முர்பாத் என அந்தப் பெண்ணை வரவழைத்து கற்பழிப்பு செய்தனர். 

தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் வந்த நிலையில், கொடுமை தாங்க முடியாத அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப்பெண்ணின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து கொண்ட போலீசார், அந்தப் பெண்ணை பாலியல் சித்திரவதை செய்த  33 பேரில் இதுவரை 26 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மீதமுள்ள 7 பேர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களின் மீது பாலியல் வன்புணர்வு, பிளாக் மெயில், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளின் கீழு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல்வேறு மகளிர் அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் குற்றம்  சாட்டப்பட்டவர்களுக்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அவ்வாறு தவறு செய்பவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

click me!