தீவிரவாத அமைப்புடன் தொடர்பு… பொறியியல் கல்லூரி மாணவர் கைது!!

By Narendran SFirst Published Jul 31, 2022, 5:58 PM IST
Highlights

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் எருமாபாளையத்தில் உள்ள கார்மென்ட்ஸ் ஒன்றில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலி முல்லா என்பவர் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த, 24 ஆம் தேதி பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது கூட்டாளி, பெங்களூரில் சிக்கிய அக்தர் உசேன் என்பதும், இருவரும் அல் குவைதா அமைப்புடன் தொடர்பில் இருப்பதும், அதற்காக மாதம், 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்று, சேலத்தில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டுவதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: நர்சிங் மாணவியை ஓட்டல் அறையில் பூட்டி வைத்து 18 மணி நேரம் உல்லாசம்... கல்லூரியில் இறக்கி விட்டு ஓட்டம்.

இதையடுத்து பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமான, சேலம் தொடர்பாளர்களை வளைக்க, மத்திய கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை, 10:50 மணிக்கு, கியூ பிரிவு டி.எஸ்.பி., செல்வகுமார் தலைமையில், 10 போலீசார், சேலம் வந்தனர். டவுன் போலீசார் துணையுடன், சேலம், கோட்டை, சின்னசாமி தெருவில் வசிக்கும், அப்ரோஸ் மகன் ஆஷிக், 20, என்பவரை சுற்றி வளைத்தனர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அவர், வெள்ளி தொழில் செய்வதோடு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரிவித்த போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பேராசிரியை மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன்... 2 லட்ச ரூபாய்க்காக அட்டுழியம்.

தொடர்ந்து, சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், சேலத்தில் தங்கி வேலை பார்த்து வரும், மேற்கு வங்கம், பீஹார் மாநில இளைஞர்களின் நடமாட்டம், மொபைல் போன் உரையாடல், அவர்களின் தொடர்பு உள்ளிட்ட விபரம் குறித்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன் அவர்களது ஆதார உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆஷிக் போன்று இன்னும் சிலர் பிடிபட வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கண்காணித்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆம்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் மத்திய உளவுத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!