வரதட்சனை கொண்டு வராததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கணவனே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
வரதட்சனை கொண்டு வராததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கணவனே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றத்தை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்து குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதாக கூறி கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் வரதட்சணை கொண்டு வராததால் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவனே பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: நர்சிங் மாணவியை ஓட்டல் அறையில் பூட்டி வைத்து 18 மணி நேரம் உல்லாசம்... கல்லூரியில் இறக்கி விட்டு ஓட்டம்.
முழு விவரம் பின்வருமாறு:- உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சக்கேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பெண் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் மாமியார் குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு இதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது அன்று முதல் இன்றுவரை எனது தாய் வீட்டிலிருந்து 2 லட்ச ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி மாமியார் கொடுமை செய்து வருகிறார். நான் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன், ஆனால் இரண்டு லட்சம் ரூபாயை எனது குடும்பத்தாரால் கொடுக்க முடியவில்லை.
இதையும் படியுங்கள்: டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!
இதனால் மாமியார், கணவன், மைத்துனர் என அனைவரும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு என் கணவர் என்னை அறையில் அடைத்து வைத்தார், நான் எனது பெற்றோர்களிடம் போனில் கூட பேச அனுமதிக்கவில்லை, ஒரு நாள் முழுவதும் நான் அறைக்குள் இருந்தேன், மறுநாள் என் கணவர் குடித்துவிட்டு வந்தார், அவருடன் அவரது நண்பர்கள் 3 பேர் வந்தனர். அறையில் இருந்த என்னை நான்கு பேரும் சேர்ந்து அறையிலேயே மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களை நான் கடுமையாக எதிர்த்தேன் ஆனால் எனது கணவர் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றி என்னை கொளுத்த முயற்சித்தார்.
ஒருவழியாக அவர்களின் காமப்பசிக்கு ஆளான நான் அங்கிருந்து தப்பித்து என் தாய் வீட்டிற்கு தப்பி வந்து விட்டேன், இந்நிலையில்தான் இந்தப் புகாரைக் கொடுக்க வந்துள்ளேன் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதை அறிந்தனர், ஆனால் அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூண்டோடு வீட்டைப் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் போலீசார் அவர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.