நர்சிங் படிக்கும் மாணவி அறையில் அடைத்து வைத்து 18 மணி நேரம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
நர்சிங் படிக்கும் மாணவி அறையில் அடைத்து வைத்து 18 மணி நேரம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் மாணவி ஒருவர் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக ஜூலை 6 ஆம் தேதி காலை சார்பாக் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது ஏட்டாவில் வசிக்கும் ஒரு நபர் அங்கு வந்தார், தன்னுடன் வந்தால் கல்லூரியில் விடுவதாக அந்த நபர் கூறினார், அதை நம்பிய அந்த மாணவி அவரின் வாகனத்தில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது, அங்கு எனது பொருட்களை இருக்கிறது, நான் அந்தப் பொருட்களை எடுக்க வேண்டும் எனகூறிய அந்த நபர், நேராக ஹோட்டலை நோக்கிச் சென்றார்.
இதையும் படியுங்கள் : பேராசிரியை மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன்... 2 லட்ச ரூபாய்க்காக அட்டுழியம்.
அதையும் அந்தப்பெண் நம்பினார், பின்னர் இருவரும் ஹோட்டலுக்கு சென்றனர், அங்கு சென்றவுடன் ஒரு அறையில் அந்த மாணவியை தள்ளிய அந்த நபர் அறையின் கதவுகளை பூட்டிக் கொண்டார், பின்னர் தன் விருப்பம் போல அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தார், கிட்டத்தட்ட 18 மணி நேரம் அந்த மாணவியை பாலியல் சித்திரவதை செய்த அந்நபர் ஜூலை 7 தேதி மதியம் 1.30 மணி அளவில் அலிகஞ்சியில் உள்ள நர்சிங் கல்லூரி அருகே அந்த மாணவியை இறக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்தே கல்லூரிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், பலமுறை மகளுக்கு போன் செய்தனர் ஆனால் அவர் எடுக்கவில்லை,
இதையும் படியுங்கள் : டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!
இதனையடுத்து வீட்டுக்கு வந்த மகள் தனக்கு நடந்தவற்றைக் கூறினார், பின்னர் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் அந்தப் பெண்ணின் தூரத்து உறவினர் என்பது தெரிந்தது. இது குறித்து தெரிவித்துள்ள நாகா காவல் நிலைய ஆய்வாளர் மனோஜ் மிஸ்ரா பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, தலைமறைவாக உள்ள நபரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.