காதலன் கண்ணெதிரே பயங்கரம்.. கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்.!

Published : Aug 26, 2021, 05:12 PM IST
காதலன் கண்ணெதிரே பயங்கரம்.. கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்.!

சுருக்கம்

 மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்து உள்ளதாக தெரிகிறது. 

மைசூரு சாமுண்டிமலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு  பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் 19 வயது இளம் பெண் இளம்கலை பட்டம் படித்து வருகிறார். அந்த மாணவி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த மாணவியும், அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் ஒரு காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்து உள்ளதாக தெரிகிறது. பின்னர் கல்லூரி மாணவியிடமும், அவரது காதலனிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது. பின்னர் கல்லூரி மாணவியை அவரது காதலன் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானது தெரிந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆலனஹள்ளி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 பேர் கும்பலையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை