யாரையும் சும்மா விடாதீங்க.. தற்கொலை செய்த மாணவியின் பரபரப்பு கடிதம்.. காதல் திருமணம் செய்த ஆசிரியர் கைது.!

Published : Nov 13, 2021, 10:00 AM IST
யாரையும் சும்மா விடாதீங்க.. தற்கொலை செய்த மாணவியின் பரபரப்பு கடிதம்.. காதல் திருமணம் செய்த ஆசிரியர் கைது.!

சுருக்கம்

வெளியே சென்ற பெற்றோர் வீட்டில் பார்த்த போது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினர். இந்த விவகாரம் தொடர்பாக  உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொன் தாரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அப்பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். சாலையோரம் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்தாரணி (17), ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- SexualHarassment:மேலாடையை கழட்ட சொல்லி ஆசிரியர் பாலியல் தொல்லை.. அவமானம் தாங்க முடியாமல் பள்ளி மாணவி தற்கொலை.!

இது தொடர்பாக தனது தோழிகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொன்தாரணி பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வெளியேறினார். பின்னர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்ந்தார். ஆனாலும், அந்த ஆசிரியர் செல்போன் மூலமாக தொடர்புகொண்டு மாணவியை மிரட்டியுள்ளார். வாட்ஸ்அப், மெசேஜ் என அடுத்தடுத்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

வெளியே சென்ற பெற்றோர் வீட்டில் பார்த்த போது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினர். இந்த விவகாரம் தொடர்பாக  உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொன் தாரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பொன்தாரணி அறையில் சோதனை செய்த போது பரபரப்பு கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘’ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது’’’ கூறப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க;- இடுப்பளவில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. பிரசவித்த தாயையும், சேயையும் சாமர்த்தியமாக மீட்ட பேரிடர் மீட்புக்குழு..!

பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடலை பெற மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவை மேற்கு மகளிர் காவல்நிலைய போலீசார், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


 
கைதான ஆசிரியர் காதல் திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது. இவரின் மனைவி அதே பள்ளியில் ஆங்கிலப்பாட ஆசிரியை. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மேலும் 2 பேர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி