ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.
கோவை தனியார் பள்ளி மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்த வழக்கில், திடீர் திருப்பமாக 2 முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரனின் மகள் பொன் தாரணி(17) ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தார். அப்படி இருந்த போதிலும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததன் காரணாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- யாரையும் சும்மா விடாதீங்க.. தற்கொலை செய்த மாணவியின் பரபரப்பு கடிதம்.. காதல் திருமணம் செய்த ஆசிரியர் கைது.!
இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த கடிதத்தில் இரு மாணவிகளுடைய உறவினர்களின் பெயர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரு மாணவிகளின் உறவினர்கள் யார்? எதற்காக அவர்களது பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார், அவர்களுக்கும் இந்த மாணவிக்கும் என்ன தொடர்பு என்ற அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க;- கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கடிதத்தில் குறிப்பிட்ட 2 பேர் சிக்கினர்.. பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம்.!
இந்நிலையில், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் இரண்டு முதியவர்கள் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஜமாத் நிர்வாகி முகமது சுல்தான் (70), இறந்த மாணவியின் வீடு அமைந்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மனோராஜ் (58) ஆகிய இரண்டு பேர் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.