கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கோயம்புத்தூரில் காரில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க;- யார் அந்த 4 பேர்..! ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. மேலும், அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- கோவையில் சிலிண்டர் வெடி விபத்து..! என்.ஐ.ஏக்கு மாற்ற முடிவு..? 2 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை..?