சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Jun 29, 2021, 06:52 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்குப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்  6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்குப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்  6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் உதயச்சந்திரன் (30). இவர், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தனது பக்கத்து வீட்டில் தனிமையில் இருந்த 9 வயது சிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இது தொடர்பாக சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த கொடூரனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு நடந்து வந்தது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

இந்நிலையில்,  இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உதயச்சந்திரனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்