ட்விட்டரில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்களின் ஆபாச வீடியோஸ்.. கதறும் சமூக ஆர்வலர்கள்

Published : Sep 20, 2022, 09:43 PM IST
ட்விட்டரில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்களின் ஆபாச வீடியோஸ்.. கதறும் சமூக ஆர்வலர்கள்

சுருக்கம்

ட்விட்டர் தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். ரகசிய வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மொஹாலியை சேர்ந்த மாணவி, தங்களுடன் பயின்று வந்த மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தன்னுடைய காதலனுக்கு அனுப்பி இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

இந்த நிலையில், அந்த ஆண் காதலன் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த கல்லூரி மாணவி, கடந்த பல மாதங்களாக இப்படி வீடியோக்களை எடுத்து கசியவிட்டுள்ளார் என்றும், சிறிய அளவிலான கேமராக்களை வைத்து, பாத்ரூமில் இவர் வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த மாணவி இமாச்சலில் உள்ள தனது காதலனுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி உள்ளார். மாணவி ஒவ்வொரு முறை வீடியோவை அனுப்பும் போதும் இவருக்கு பணம் வந்துள்ளது. இதனால் தொடர்ந்து மாணவிகள் குளிப்பதை வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ, கல்லூரி மாணவிகளுக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான ட்விட்டரை தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘20 - 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக டுவிட்டர் மாறி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோக்கள் டுவிட்டரில் அதிகம் பகிரப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!