கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பேருந்து ஓட்டுநர்… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Sep 20, 2022, 8:40 PM IST
Highlights

அரியலூரில் பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அரியலூரில் பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் முதல் அந்த மாணவியின் உறவினர்கள் வரை அனைவரும் பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: கூட பிறந்த தங்கச்சியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் அரியலூரில் பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது வீட்டு அருகில் வசிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களை பதிவிட்ட மருத்துவர்.. திட்டம் போட்டு தூக்கிய காதலி - அதிர்ச்சி சம்பவம்

இதை அடுத்து அவர் மீது பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனியாக இருந்த மாணவியை ராமலிங்கம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து.

click me!