சாக்லேட் கொடுத்து பள்ளி சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

Published : Feb 04, 2024, 03:22 PM ISTUpdated : Feb 04, 2024, 03:24 PM IST
சாக்லேட் கொடுத்து பள்ளி சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

சுருக்கம்

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி மாணவியின் பெற்றோர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மகள் திடீரென காணவில்லை. 

சாக்லெட் கொடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலி தொழிலாளி யோவான் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி மாணவியின் பெற்றோர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மகள் திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மகள் அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். 

இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. குழந்தைகள் கண்முன்னே ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை.. அப்பா.. அப்பா.. கதறல்.!

இதுகுறித்து மகளிடம் பெற்றோர் விசாரித்த போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாக்லேட் தருவதாக கூறி  தனது மகளை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளில் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பல மாதங்களாக சாக்லேட் தருவதாக கூறி பல சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இதையும் படிங்க:  சமைக்க எவ்வளவு நேரம்? ஆத்திரத்தில் தாயை கம்பியால் அடித்து கொன்ற 17 வயது மகன்!இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

இதனை தொடர்ந்து போலீசார் அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவான்மியூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் 8 முதல் 12 வயது வரை உள்ள மாணவிகளை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்கு வெளியே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று இதுபோன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, யோவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!
4 மாதங்களாக வலியால் துடித்த 14 வயது சிறுவன்.! விடாத இரண்டு காமக்கொடூரன்கள்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!